
தாம்பரம் அரசு மருத்துவமனையில் நிர்வாக பகுதிகள் புகுந்து லேப்டாப் திருடி இரண்டு பேர் அங்கேயே படுத்து உறங்கி மறுநாள் காலையில் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சமிபத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் செயல்படுகிறது.
அதன் அருகாமையில் நிர்வாக அலுவலக கட்டிடம் செயல்படும் நிலையில் அந்த அலுவலக கதவு உடைத்து உள்ளே சென்ற இரண்டு நபர்கள் 7 லேப்டாப்களை திருடி சென்றனர்.
இது குறித்து சிசிடிவி காட்சிகளுடம் தலைமை மருத்துவர் பழனிவேல் ராஜன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணையை துவக்கினார்கள்.
இதில் கண்ணகிநகரை சேர்ந்த ஜேக்கப்(29), அப்பு(27) ஆகிய இருவர் பிடிப்பட்டனர்.

அவர்களிடன் விசாரித்தபோது மருத்துவமனை நிர்வாக கட்டிடதிற்கு பாதுகாவலர் இல்லாமல் இல்லாமல் இருந்ததை நோட்டமிட்ட நிலையில் நள்ளிரவில் கெளபாரை கொண்டு கதவை நெம்பி உள்ளே நுழைந்ததாகவும் அங்குள்ள 7 லேப்டாப்களை சுருட்டி கட்டிக்கொண்டு உடனடியாக வெளியேறினால் இரவு ரோருந்துபோலீசில் சிக்கிவோம் என அதிகாலை 4 மணி வரை அங்கேயே படுத்து உறங்கி அதிகாலை வெளியேறி சென்றதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து இருவரையும் கைது செய்து தாம்பரம் குற்றவியல் நடுவர் முன்பாக ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
தாம்பரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஏற்கனவே பாதுகாவலர் ஒருவர் 40 குழாய்களை திருடி சிறை சென்ற நிலையில் மேலும் நிர்வாக கட்டிடத்தில் பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி நள்ளிரவில் புகுந்த திருடன் 7 லேப்டாப்களை திருடிய நிலையில் பதட்டம் இன்றி அதிகாலை வரை படுத்து உறங்கி வெளியேறி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.