
மதுராந்தகம் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்ட மேடையில் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், எந்தவித அழுத்தமும் இன்றி அமமுக தே.ஜ. கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த கூட்டணியின் வெற்றிக்காக அமமுகவின் ஒவ்வொரு தொண்டனும் தமிழ்நாடு முழுவதும் அயராது பாடுபடுவான் என்கின்ற உறுதியை, பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் சொல்லி கொள்கிறேன்.(மதுராந்தகம் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை டிடிவி தினகரன் கூறியதும் கூட்டத்தினர் ஆரவாரம்.)
நாங்கள் எல்லாம் அம்மாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள். எங்களுக்குள் சண்டை, சச்சரவுகள் இருந்தது உண்மைதான். ஆனால் தமிழ்நாட்டின் நலனை கருதியும் அமமுகவின் நலனை கருதியும் பிரதமரின் அழைப்பை ஏற்று எங்கள் மனதிலே இருந்த கோப தாபங்களை விட்டுவிட்டு எந்த அழுத்தமும் இன்றி இந்தக் கூட்டணியில் இணைத்துக் கொண்டோம்.