2026 தேர்தலில் அதிமுகவுடன் அமமுக கூட்டணி அமைத்திருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தங்கள் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என்று கூறியுள்ள அவர், அமமுகவின் உயரம் என்னவென்பது தங்களுக்கு தெரியும், அதையறிந்து உரிய இடங்களை கூட்டணியில் பெற்று போட்டியிடுவோம் என்றும் டிடிவி தினகரன் குறிப்பிட்டார். 2026 தேர்தலில் பொது எதிரியான திமுகவை வீழ்த்துவதே தங்களது குறிக்கோள் என்றும் கூறினார்.