
நாவலூரில் 8 வது மாடியில், 3 வயது ஆண் குழந்தை, 2வது மாடிக்கு தவறி விழுந்து உயிரிழந்தது.
திருப்போரூர் அடுத்த நாவலூரில், ஓ.எம்.ஆர், சாலை ஒட்டி 20 அடுக்குகொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 5 வது மாடியில் வசிப்பவர் மணிகண்டன் 33.
இவரது மனைவி ஜிஜி, தம்பதிக்கு ஆரோவ், 3 , என்ற ஆண் குழந்தை இருந்தது.
தம்பதி இருவரும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள்.
நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு தம்பதிகள் குழந்தையுடன் தரைத்தளத்தில் இருந்து லிப்ட்டில் 5 வது மாடிக்கு சென்றனர். குழந்தை சிறிய மிதிவண்டி வைத்திருந்தார்.
குழந்தையின் தாய், தந்தை 5வது மாடியில் இறங்கிவிட்டனர். மிதிவண்டியுடன் குழந்தை இறங்க தாமதமானதால் லிப்ட் கதவு மூடிக்கொண்டு மேலே சென்றது.
8 வது மாடியில் திறந்த லிப்ட் குழந்தை பதட்டத்துடன் இறங்கி வெளியே வந்து பால்கனி வழியாக எட்டிப்பார்த்தது. அப்போது, மாடியில் இருந்து தவறி 2 வது மாடியில் விழுந்தது.
இதில் மார்பகத்தில் படுகாயமடைந்த குழந்தையை, பெற்றோர் கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
தாழம்பூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.