
கேரளமாநிலம் கொள்ளம் மாவட்டம் தென்மலா பகுதியை சேர்ந்த பக்ருதின் என்பரது மகள் பவுசியா(20), இவர் சென்னை குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மெடிகல் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
அதே குரோம்பேட்டை நியூகாலணியில் உள்ள இமை பெண்கள் விடுதியில் தங்கிய நிலையில் கடந்த மூன்று நாட்களாக கல்லூரிக்கு செல்ல வில்லை.
இந்த நிலையில் பவுசியாவின் தோழிகள் குரோம்பேட்டை சி.எல்.சி சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் காதலன் கேரளாவை மாநிலம் கொள்ளதை சேர்ந்த ஆசிக்(20) என்பவர் பவுசியாவை கழுத்து நெரித்து கொலை செய்துவிட்டு அதனை தன் செல்போனில் ஸ்டேடசாக வைத்துள்ளதாக குரோம்பேட்டை போலீசுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை அளித்தனர்.
இதனையத்து தாம்பரம் காவல் உதவி ஆணையாளர் சீனிவாசன் தலைமையில் போலீசார் அந்த தனியார் தங்கும் விடுதியில் 201ம் நெம்பர் அறையில் இருந்து பவுசியாவின் பிரேதத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.
அதே வேளையில் போலீசுக்கு தகவல் அளித்த தோழிகளிடம் விசாரித்தபோது ஆசிக் தப்பி செல்ல முயல்வதாக தகவல் கிடைத்தது அதனால் ஆசிகிடம் பேச்சு கொடுக்க செய்து இடம் குறித்து கேட்டறிந்த குரோம்பேட்டை போலீசார் ஆசிக்கை பல்லாவரம் ரெயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
மேலும் அவனை குரோம்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது பவுசியாவிற்கு 16 வயது பள்ளி பருவத்திலேயே இருவர் இடையே காதலித்து திருமணம் செய்த நிலையில் பவுசியா கருவுற்றார்.
மைனர் பெண்ணாக இருக்கும்போது பவுசியா குழந்தை பெற்றெடுத்த நிலையில் குழந்தை கர்நாடகவில் ஆசிரமத்தில் வளர்ந்துவருவதாகவும் இந்த பிரச்சினையில் போஸ்கோ வழக்கில் ஆசிக் கைதாகி சிறை சென்று வந்துள்ளார்.
அதன் பின்னரும் காதல் தொடர அடிக்கடி சென்னை வந்து பவுசியா தங்கும் விடுதியில் பேசிசெல்வாரம்,
இன்று காலை 10 மணிக்கு இந்த தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்த நிலையில் ஆசில் செல்போனில் பல பெண்களுடன் தொடர்பு இருந்ததை பவுசியா கேள்வி எழுப்பியபோது இருவருக்கும் பிரச்சினை எழுந்துள்ளது என்று அதில் தன் பனியனை கழட்டி அதனால் பவுசியா கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு செல்போனில் ஸ்டேடஸ் வைத்ததாக போலீசிடம் ஆசிக் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்..
காதலன் ஆசிக் தப்ப முயன்ற போது கைது செய்த குரோம்பேட்டை போலீசாருக்கு தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் பாராட்டு. தெரிவித்தார்..