பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான 15.9.2023 அன்று காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

புதிய பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் உரிமைத்தொகை வழங்குதல் கலைஞர் உரிமைத் திட்டத்தின் கீழ் முகாம்களில் விண்ணப்பித்து கள நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு ஆய்வு தேர்ந்தெடுக்கப்பட்ட 7.35 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு இன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத் தொகை பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 6 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7.35 இலட்சம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து திட்டத்தினை விரிவாக்கம் செய்து மொத்தம் 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.