வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடனுதவிகளை வழங்குதல்

“கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி அனுப்பப்படும்”- தமிழக அரசு தகவல்

1.13 கோடி பேர் பயனடைந்துள்ள நிலையில், 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விண்ணப்பங்கள் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். தகுதியான பயனாளிகள் விடுபடக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதி.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மேலும் 7.35 இலட்சம் மகளிருக்கு ரூ.1000/-

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான 15.9.2023 அன்று காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார். புதிய பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் உரிமைத்தொகை வழங்குதல் கலைஞர் உரிமைத் திட்டத்தின் கீழ் முகாம்களில் விண்ணப்பித்து கள நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு ஆய்வு தேர்ந்தெடுக்கப்பட்ட […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 இலட்சத்து 35 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/-& வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்து அடையாளமாக 6 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) வழங்கினார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில், நடைபெற்ற விழாவில், புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7 இலட்சத்து 35 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/–& வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்து அடையாளமாக 6 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை (110 605) வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை […]
மேல்முறையீடு செய்தவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கும் பணி தொடக்கம்

11.85 லட்சம் பேர் கலைஞர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பம். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு உரிமைத்தொகை 2ஆம் கட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். மேல்முறையீடு செய்த தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில் வரவு வைக்கும் பணி தொடக்கம்.
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி மேல்முறையீடு மற்றும் புதிதாக விண்ணப்பித்த 11.85 லட்சம் மகளிரின் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தொடங்கியுள்ளது

தீபாவளியை முன்னிட்டு நவ.12-ம் தேதிக்கு முன்பாகவே ரூ.1000 உரிமைத் தொகையை விடுவிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்.15-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு ரூ.1,000 வழங்கப்பட்டது. இதற்கிடையே, இந்ததிட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அத்துடன், விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் […]
மகளிர் உரிமைத்தொகைக்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு

மேல்முறையீடு விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடக்கம் தகுதியானவர்களுக்கு வரும் 25ம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
திமுக ஆட்சிக்கு எதிராக பாஜக மகளிர் போராட்டம்

திமுக தேர்தல் அறிக்கையின்படி அனைத்து மகளிர்க்கும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்காதது, பால், மின்சார கட்டணம், சொத்துவரி உயர்வை உள்ளிட்டவைகளை கண்டித்து செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம் முடிச்சூர், லட்சுமி நகர் பகுதியில் நடைபெற்றது.இதில் மாநில மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கிறது ‘மகளிர் உரிமை மாநாடு’!

திமுக எம்.பி., கனிமொழி முன்னிலை வகிக்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்ட பல பெண் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் குளறுபடி!

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்குவதில் தற்போது புதிய பிரச்னை எழுந்துள்ளது. ரூ.1,000 வேண்டி விண்ணப்பித்த புதுக்கோட்டையை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் மனைவி சித்ரா என்பவருக்கு அவர் அரசு வேலையில் இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இது தொடர்பாக அவர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இணைய கோளாறு காரணமாக இவ்வாறு பலருக்கும் மெசேஜ் சென்றுள்ளது என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு தற்போது வரை 7 லட்சம் பேர் மறுவிண்ணப்பம் செய்துள்ளதாக […]