அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகப்‌ பொதுச்‌ செயலாளரும்‌, சட்டமன்ற எதிர்க்கட்சித்‌ தலைவரும்‌, தமிழ்‌நாடு முன்னாள்‌ முதலமைச்சருமான ‘புரட்சித்‌ தமிழர்‌’ எடப்பாடி கே.பழனிசாமி சென்னை, பசுமைவழிச்‌ சாலையில்‌ உள்ள செவ்வந்தி இல்லத்தில்‌ நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌ சிட்லபாக்கம்‌ ச.ராசேந்திரன்‌, முன்னாள்‌ எம்பி. நேரில்‌ சந்தித்து பூங்கொத்து வழங்கி‌ வாழ்த்து பெற்றார்‌.