தனது வளர்ப்பு நாய்க்குத் ‘துலாபாரம்’ (வெல்லம்/தங்கம்) வழங்கிய விவகாரம் தொடர்பாக, தெலுங்கு நடிகை டீனா ஸ்ராவ்யா பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

தனது நாய் உடல்நலக் குறைவிலிருந்து குணமடைய வேண்டும் என்பதற்காக வேண்டியிருந்ததாகவும், அந்த பக்தியினால் தான் அவ்வாறு செய்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தையோ அல்லது சடங்குகளையோ கொச்சைப்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றும், இந்தச் செயலால் பக்தர்கள் யாராவது மனவேதனை அடைந்திருந்தால் மன்னிக்கும்படியும் அவர் ஒரு வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.