
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை சவரனுக்கு ரூ. 4,120 உயர்ந்துள்ளது.
இன்று(ஜன. 21) காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,800 அதிகரித்து ரூ.1 லட்சத்து 14,000 – க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வர்த்தகம் நிறைவடைவதற்கு முன்பு இன்று பிற்பகலில் கிராமுக்கு ரூ. 515 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,415-க்கும் சவரனுக்கு ரூ. 1,320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15,320 – க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ.345-க்கும், கிலோ கட்டி வெள்ளி ரூ. 5,000 உயர்ந்து ரூ. 3.45 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.