
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக மீண்டும் டெல்லிக்கு போய் உள்ளார்.
இன்று அவரிடம் இரண்டாவது கட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசும் போதே நெரிசல் ஏற்பட்டது உங்களுக்கு தெரியாதா? என்பது உட்பட பல கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டனர் .வழி நெடுக அலங்கார வளைவுகள் இருந்ததால் கூட்டத்துக்கு வர தாமதம் ஆனதாக விஜய் கூறினார். இது தொடர்பான ஆதாரங்களை உடனே காட்டும் படி சி.பி.ஐ உத்தரவிட்டது.