திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, பல அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பிறந்தநாளையொட்டி, “கர்ஜனை மொழி – என் தங்கை கனிமொழி” என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.