நடப்பு சாம்​பியன் அர்​ஜென்​டி​னா, பிரேசில், பிரான்​ஸ், ஸ்பெ​யின், ஜெர்​மனி உட்பட 48, அணி​கள் பங்​கேற்​கும் 23-வது ஃபிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்​கா, கனடா, மெக்​சிகோ ஆகிய 3 நாடு​களில் நடை​பெறுகிறது.

இந்த தொடருக்​கான பரிசுத்​தொகையை ஃபிபா அறி​வித்​துள்​ளது. இதன்​படி தொடருக்​கான மொத்த பரிசுத்​தொகை சுமார் ரூ.6 ஆயிரம் கோடி​யாகும். சாம்​பியன் பட்​டம் வெல்​லும் அணி ரூ.450 கோடியை பரி​சாக அள்​ளிச்செல்​லும். 2022-ம் ஆண்​டில் சாம்​பியன் பட்​டம் வென்ற அர்​ஜெண்​டினா அணி ரூ.342 கோடியை பரி​சாக பெற்​றிருந்​தது