பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற இந்திய வீரர்கள்

டெல்லி: டி20 உலகக்கோப்பையை பிரதமர் மோடியிடம் கொடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து பெற்றனர். உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களை வாழ்த்திய பிரதமர் மோடி, அவர்களுக்கு விருந்தளித்து வருகிறார்.

டி20 வெற்றியை நீலாங்கரையில் ஆழ்கடலில் கொண்டாடிய வீரர்கள்

டி20 உலக கோப்பையை இந்தியா இரண்டாவது முறை கைபற்றியதை ஆழ்கடலில் கொண்டாடிய ஆழ்கடல் பயிற்சி புரியும் கிரிகெட் ஆர்வலர்கள் சென்னை காரம்பாக்கத்தை சேர்ந்தவர் அரவிந்த் தனுஸ்ரீ, ஆழ்கடல் நீச்சல் பயிற்சியா ளரான இவர் இந்தியா டி20 உலக கோப்பை இரண்டாவது முறையாக கைப்பற்றியதை கொண்டாடும் விதமாக , மூத்த கிரிகெட் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெருவவை கெளரவிக்கும் விதமாக சென்னை கிழக்கு கடற்கரை நீலாங்கரை கடற்கரையில் இருந்து 5 […]

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா- தென் ஆப்ரிக்கா மோதல்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காமல் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம். கடந்தாண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை நூலிழையில் தவறவிட்ட இந்தியா சாம்பியன் ஆகுமா என எதிர்பார்ப்பு. டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.20கோடி, 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 கோடி பரிசாக கிடைக்கும்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான மகளிர் டெஸ்ட் போட்டியை பார்க்க அனுமதி இலவசம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

இதேபோல், ஜூலை 5, 7, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் டி20 போட்டிகளுக்கான டிக்கெட்-ஐ, ஜூன் 29ம் தேதி PAYTM insider இணையத்தில் பெறலாம் எனவும் அறிவிப்பு. இந்த டிக்கெட் விலை ₹150 என நிர்ணயம்.

தனது முதல் டி20 உலகக் கோப்பை தொடரிலேயே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது அமெரிக்கா அணி

அமெரிக்கா, அயர்லாந்து இடையிலான நேற்றைய போட்டி மழையால் ரத்தானதால், குரூப் A பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்க அணி 5 புள்ளிகளுடன் 2 இடம்பிடித்தது. இதன் மூலம் 2026ல் இந்தியாவில் நடைபெறவுள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. அமெரிக்க அணி தேர்வு பெற்றதால் பரிதாபமாக டி20 உலக கோப்பையில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான்.

இந்திய கால்பந்து அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

சுனில் சேத்ரி ஓய்வு பெற்றதை அடுத்து, இந்திய கால்பந்து அணியின் புதிய கேப்டனாக கோல் கீப்பர் குர்ப்ரீத் சிங் சந்து நியமிக்கப்பட்டார். இன்று இரவு 9 மணிக்கு தோஹாவில் நடைபெறும் உலக கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் பலம் வாய்ந்த கத்தாரை எதிர்கொள்கிறது இந்தியா.

இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு மோடி பெயரில் விண்ணப்பம்

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பெயரில் போலியாக விண்ணப்பங்கள் பதிவு. கூகுள் விண்ணப்பம் மூலம் பெயர்களை பதிவு செய்ய பிசிசிஐ கூறிய நிலையில் போலி விண்ணப்பங்களால் சர்ச்சை. மோடி, அமித்ஷா மட்டுமின்றி சச்சின், தோனி, சேவாக் ஆகியோரின் பெயர்களிலும் போலியாக விண்ணப்பம் பதிவு. மொத்தம் 3000 விண்ணப்பங்கள் குவிந்துள்ள நிலையில், இதில் எது உண்மையான விண்ணப்பம் என கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் கோப்பை கொண்டாட்டங்களாலும் ஆக்ரோஷத்தாலும் வெல்லப்படுவதில்லை

வெறும் சிஎஸ்கேவை மட்டும் வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது; ஐபிஎல் கோப்பையை வெல்ல நீங்கள் பிளேஆஃப்களிலும் நன்றாக விளையாட வேண்டும்: முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பாதி ராயுடு