சுற்​றுச்​சூழல் பாது​காப்பை வலி​யுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆடு-​மாடு மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்​களின் மாநாடு போன்​றவற்றை தொடர்ச்​சி​யாக நடத்தி வரு​கிறது. 2026 தேர்​தல் நெருங்கி வரும் நேரத்​தில், மற்ற அரசி​யல் கட்​சிகள் அரசியல் பரப்​புரைக் கூட்​டங்​கள், மாநாடு​களை நடத்தி வரு​கின்​றன. இந்​நிலை​யில், சீமான் நடத்​தும் மாநாடு​கள் பேசும் பொருளாகி உள்ளன. இதற்​கிடை​யில், தஞ்​சாவூர் மாவட்​டம் திரு​வை​யாறு பகு​தி​யில் ‘15 -ந்தேதி தண்​ணீர் மாநாட்​டை’ நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது