கரூர் நெரிசல் சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்தினர்
நேற்று இரண்டு பஸ்களில் பனையூர் வரவழைக்கப்பட்டனர் அவர்களின் தனித்தனியாக 5 நிமிடம் விஜய் சந்தித்து பேசினார் பின்னர் அவர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டார்
கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூற இயலாததற்காகவும் அனைவரிடமும் விஜய் கண்ணீர்மல்க மன்னிப்பு கோரி உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக விஜய் கூறியதாகவும் தெரிகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு தவெக சார்பில் வழங்கப்படும் என்றும் விஜய் உறுதி அளித்துள்ளார்.