தமிழ் சினிமாவின் இரு துருவங்களான ரஜினிகாந் தும், கமல்ஹாசனும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைய போகிறார்கள் என்ற தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தூண்டி இருக்கிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனக ராஜ் இயக்கப்போவதாகவும், அடுத்த ஆண்டில் (2026) இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப் படுகிறது. இதற்கிடையில் ரஜினிகாந்தின் மகளான சவுந்தர்யா தெரிவித்த தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், இதுதொ டர்பான ஒரு கேள்விக்கு, “கமல்ஹாசன் தயாரிக்கும் ஒரு படத்தில் அப்பா (ரஜினி) நடிக்கப் போகிறார். சரியான நேரத்தில் அப்பாவே அதனை வெளியிடுவார். அவர்களை ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்று நாங்களும் ஆசைப்படுகிறோம். எல்லோரையும் போலவே அந்த படத்துக் காக நாங்களும் காத்திருக்கிறோம்”, என்று பதிலளித்தார்.