
தற்போது மழை காலம் தொடங்கிவிட்டது இதனால் டெங்கு உட்பட பல்வேறு நோய்கள் குழந்தைகளை தாக்குகின்றன இதுகுறித்து இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி தமிழ்நாடு குழுத் தலைவர் டாக்டர் ராஜேந்திரன் கூறும்போது, ‘டெங்கு’ பாதிப்பு ஏற்படுத்தும் கொசுக்கள் பெரும்பாலும் காலை 6 முதல் 8 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் தான் கடிக்கும். குழந்தைகள் கை, கால்கள் முழுவதும் மூடும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும். வீட்டின் சுற்றுப்புற பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் தான் கொசுக்கள் முட்டை வைக்கும். எனவே தண்ணீரை தேங்க விடத் கூடாது என்றார்.