
தமிழக அரசின் மின்துறை செயலராக இருந்த பீலா வெங்கடேசன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2 மாதங்களாக சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை உடல்நிலை மோசமடைந்து காலமானார். அவருக்கு வயது 56.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பீலா வெங்கடேசன், 1969-ம் நவ.11-ல் பிறந்தார். தாயார் ராணி வெங்கடேசன் சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்துள்ளார். தந்தை வெங்கடேசன், தமிழக காவல்துறை டிஜிபியாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர். எம்பிபிஎஸ் படித்துள்ள பீலா வெங்கடேசன், கடந்த 1997-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியானார்.
2019 பிப்ரவரி முதல் 2020 ஜூன் மாதம் வரை கரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதாரத் துறை செயலராக பணியாற்றினார். அதன்பின் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை செயலர், கைத்தறித்துறை ஆணையர், நில சீர்திருத்தத்துறை ஆணையர் பொறுப்புகளை வகித்தார். இறுதியாக மின்துறை செயலராக பணியாற்றி வந்தார்.
புற்றுநோய் காரணமாக அவர் மரணமடைந்ததாக தெரியவந்துள்ளது இவரது கணவர் தான் போலீஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ் .பாலியல் புகாரில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர் மேலும் பீலா வெங்கடேசன் உடலுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்