
தாம்பரம் மா நகராட்சி மண்டலம் 3,வார்டு 22/39 , திருமலை நகர் வடக்கு விரிவாக்கம் இரண்டாம் குறுக்கு தெருவில்,சட்ட விரோதமாக கேபிள்கள் மின் கம்பத்தில் கட்டப்பட்டு உள்ளன. இதை பற்றி ஏற்கனவே பல முறை புகார் அளித்தும் ஒரு பயனும் இல்லை. முதியவர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வரும் போது, சட்ட விரோத கேபிள் கழுத்தில் மாட்டி கீழே விழுந்தார். நல் வாய்ப்பாக ,உயிர் சேதம் ஏதும் இல்லை. அந்த கேபிளில் மின்சாரம் பாய்ந்து இருந்தால் என்னாவது?? இதே பகுதியில் ,மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பலி ஆனார். ஆனாலும் மா நகராட்சி அதிகாரிகள் கொஞ்சம் கூட பாதுகாப்பு வேலைகள் செய்யவில்லை. மக்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த சட்ட விரோத கேபிள்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்