
மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2-வது போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்திருந்தது.பாகிஸ்தானுக்கு எதிராக இருதரப்பு ஒருநாள் போட்டி தொடரை 34 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் வென்றுள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. கடைசியாக அந்த அணி பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 1991-ம் ஆண்டு வென்றிருந்தது.