
சென்னையை அடுத்தஜமீன் பல்லாவரம், எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் கலைவாணி(வயது 50). தாம்பரம் அடுத்த முடிச்சூரில் உள்ள தனியார் கால் சென்டர் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 30-ந்தேதி இரவு பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அவர் அணிந்து இருந்த இருந்த ரெண்டரை பவுன் தங்கை தங்க சங்கிலியை யாரோ பறித்து சென்று விட்டனர்
இதுபற்றி பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து திருவண்ணா மலை மாவட்டம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த எலக்ட்ரீசியனான விக்னேஷ்(23) என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர்