ரயில்வே பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதை 20 வருடமாக தாமதமாய் வருகிறது .இது தொடர்பான வழக்கில் ரயில்வே துறையினர் பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2,3 குடியிருப்போர் நலச்ஙக்கங்களின் இணைப்புமையம் சார்பில் சுமார் 15 வருடங்களாகியும் முடிவு பெறாத ராதாநகர் சுரங்கப்பாதை பணி குறிப்பாக சுரங்கப்பாதையிலிருந்து ரயில் நடைமேடைக்கு செல்ல படிக்கட்டுக்கள் அமைக்க, எஸ்கலேட்டர் அமைக்க வலியுறுத்தி அனைத்து மட்டத்திலும் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் பயன் இல்லாத நிலையில் இணைப்புமையம் சார்பில் அதன் செயலாளர் முருகையன் அவர்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்(28123/2025). இன்று அந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அவர்களிடம் வந்தது. இந்த வழக்கு குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் வழக்கறிஞர் திருமதி.எஸ்.வர்ஷாவின் வாதங்களைக் கேட்ட பிறகு, 30.07.2025 அன்று, ரிட் மனுவில் எழுப்பப்பட்ட பிரச்சினை முக்கியமானது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. எனவே, ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை குரோம்பேட்டை ரயில் நிலையத்தின் 2 மற்றும் 3 நடைமேடைகளுடன் LC 27 சுரங்கப்பாதையை இணைக்கும் படிக்கட்டுக்களை கட்டுவதில் ஏற்பட்ட தேவையற்ற தாமதம் மற்றும் முழுமையான புறக்கணிப்பைக் குறிப்பிட்டது. சுரங்கப்பாதையிலிருந்து நடைமேடைக்கு படிக்கட்டுக்கள் அமைப்பது திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும், இது இல்லாமல் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்கும் நோக்கம் நிறைவேறாது. நடைபாதை அமைப்பது திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேரில் மற்றும் எழுத்துப்பூர்வமாக பல கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், அதை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, LC 27 – ஐ தினமும் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் இதன் சுமையை எதிர்கொள்கின்றனர் என்பதையும் மறந்துவிடக் கூடாது. உண்மையில், திரிசூலம் மற்றும் மீனம்பாக்கம் போன்ற பிற ரயில் நிலையங்களில் குரோம்பேட்டையை விட மிகக் குறைந்த மக்கள் பயன்படுத்தும் இடங்களில் படிக்கட்டு வசதிகள் இருக்கும்போது, ராதாநகர் சுரங்கப்பாதையில் அமைப்பதில் என்ன சிரமம் என்று புரியவில்லை. இதில் எடுக்கப்பட்ட/எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து 18.8.2025 அன்று ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறை அறிக்கை/பதில் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. நல்லதே நடக்கும் என செயலாளர் முருகையன். தெரிவித்தார்.