
திருவாரூர், நாகை மாவட்டங்களில் பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ள பழனிசாமி, நேற்று முன்தினம் இரவு திருத்துறைப்பூண்டியில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, திருவாரூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று ஓய்வெடுத்தார்.இந்த சூழலில் நாகையில் பாஜக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக, திருவாரூர் வழியாக சென்ற நயினார் நாகேந்திரனுக்கு பாஜகவினர், திருவாரூரில் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, நயினார் நாகேந்திரன், பழனிசாமியை சந்திப்பார் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவரை சந்திக்காமல் சென்றதால், இரு கட்சியின் தொண்டர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.