குரோம்பேட்டை ராதாநகர் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே துறையும்- மாநில நெடுஞ்சாலை துறையும் 15 ஆண்டுகளுக்கு முன்பாக பணிகளை துவக்கியது அப்போது முதல் இந்த ரெயில்வே கேட்டை கடந்து செல்லும் பேரூந்துகள் நிறுத்தபட்டது,

இதனால் குரோம்பேட்டை, ராதாநகர், நெமிலிச்சேரி உள்ளிட்ட குடியிருப்பு பகுதியை சேர்ந்த 3 லட்சம் பேர் மாற்று பாதையில் செல்லவேண்டியுள்ளது,

இந்த நிலையில் ரெயில்வே சுரங்கப்பாதை பணிகள் நிறைவடையும் நிலையில் மேலும் 10 அடி அகலம் 100 அடி நிளம் இடம் தேவைப்படுவதாக நெடுஞ்சாலைத் துறையினர் ரெயில்வே துறையினரை கேட்டுள்ளனர்,

இதனால் ராதாநகர் சுரங்கப்பாதை பணி தடைப்பட்டுள்ளதாகவும், அதுபோல் நகரும் படிக்கட்டு சாலை விரிவாக பணிக்கான அகற்றப்பட்ட நிலையில் ரெயில் நிலையம் செல்பவர்கள், அருகிள் உள்ள கல்லூரிக்கு செல்பவர்கள், குடியிருப்போர் பாதிக்கப்படுவதாக கூறி தாம்பரம் மாநகராட்சி 2,3 வது மண்டல குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் முருகையன், தலைமையில் ஸ்ரீதர்,அரசி, நாசே சீனிவாசன். மற்றும் நலச்சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டுராதாநகர் ரெயில்வே கேட்டை முற்றுகையிட்டு வழி மறித்து மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுபிப்பினார்கள்,

தகவல் அறிந்த குரோபேட்டை போலீசார், போக்குவரத்து போலீசார் வாகனங்களை மாற்றுவழியில் அனுப்பிய நிலையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் கலைந்தனர்.

இதனால் ஒருமணி நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.