
மத்திய அரசு அப்பில்.
சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பின்படி, ஒரு பெண் பாஸ்போர்ட் பெற விரும்பினால் கணவரின் அனுமதியோ, அவரது கையெழுத்தோ மனைவி பெற வேண்டிய அவசியம் இல்லை என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கணவரின் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்கத்தை காட்டுவதாக நீதிபதி விமர்சித்தார்.இதனால், மனைவி தனியாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். பெண்கள் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும்போது படிவம் ஜே-வில் கணவர் கையெழுத்து பெற அவசியமில்லை என ஐகோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது. சென்னை ஐகோர்ட் அளித்த இந்த தீர்ப்பு குறித்து விளக்கம் கோரி மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.