குரோம்பேட்டையில் வைஷ்ணவா கல்லூரி அருகே சுரங்க ரயில் பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

குரோம்பேட்டை ராதாநகர், வைஷ்ணவா கல்லூரி ரயில்வே கேட்டுக்களுக்கு கிழக்குப்பகுதியில் சுமார் 3 லட்சம் ஏழை எளிய நடுத்தர மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து ரயில்வே கேட்டுக்களை காரணம் சொல்லி நிறுத்தப்பட்டுவிட்டது.
இதனால் இம்மக்கள் தனியார் வாகனங்களை நம்பி உள்ளனர். தினமும் குறிப்பிட்ட தொகையை செலவழிக்கும் நிலை உள்ளது. அது மட்டுமல்லாமல், ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது, பல உயிர்கள் பலியாகிறது. இவைகளை தவிர்க்க வைஷ்ணவா கல்லூரி ரயில்வே கேட்டில் அரசு பேருந்து சென்று வரும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி குடியிருப்போர் சங்கங்களின் இணைப்புமையம் சார்பில் 2005ஆம் 😭ஆண்டுமுதல் அனைத்துமட்டத்திலும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

கடந்த 2014ஆம் ஆண்டு ரூ 60 கோடியில் கனரக இருவழி சுரங்கப்பாதை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது. இத்திட்டம் அமுல்படுத்துவது குறித்து கேட்டபோது, ராதாநகர் சுரங்கப்பாதை பணி முடிந்தவுடன் இந்த வேலை தொடங்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து இணைப்புமைய செயலாளர் முருகையன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டதற்கு, இத்திட்டம் கைவிடப்பட உள்ளதாக எழுத்துபுபூர்வமாக மண்டலப்பொறியாளர் தெரிவித்துள்ளார். இத்திட்டம் கைவிடப்பட்டால் சுமார் 3 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக அமையும். இதை கைவிடக்கூடாது, 2014ஆம் ஆண்டு திட்டத்தின்படி அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி குடியிருப்போர் சங்க இணைப்புமைய தலைவர் ஸ்ரீதர், செயலாளர் முருகையன், சமூக ஆர்வலர் டேவிட் மனோகரன் தலைமையில் சுமார் 100 பேருக்குமேல் திரண்டு கண்டன கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
மண்டல பொறியாளர் அலுவலகத்தின் முன்பு நடந்த போராட்டத்தின் முடிவில் உதவி மண்டலப்பொறியாளரை சந்தித்து திட்டத்தைகைவிடக்கூடாது, செயல்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிட்லபாக்கம் இணைப்பு சங்கத்தின் விஸ்வநாதன், சர்வ மங்களா நகர் சங்கச் செயலாளர் ரவி கலந்து கொண்டனர். மற்றும் 2,3 நல சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்