தாம்பரம்

குரோம்பேட்டை நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் நிரஞ்சனா தேவி வயது 68 இவர் அசோக் நகரில் நடைபெறும் உறவினர் இல்ல திருமணத்திற்கு செல்வதற்காக குரோம்பேட்டையில் இருந்து 66 ஏ என்ற பேருந்தில் ஏறி அஸ்தினாபுரம் சென்றுள்ளார் அங்கு உள்ள தனது தம்பி வீட்டுக்கு சென்ற பின் தனது கைப்பையை திறந்து பார்த்துள்ளார் அப்போது பையில் வைத்திருந்த சுமார் 14 சவரன் தங்க நகைகள் மாயமாகியுள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்த நிரஞ்சனா தேவி சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்தில் நகைப்பை தவறவிட்டாரா? அல்லது கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைப்பையில் வைத்திருந்த 14 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர என்ற கோணத்தில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்