
திருநீர் மலையில் பழுதடைந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்தன..துணை மேயர் நேரில் வந்து ஆறுதல் கூறினார்
பல்லாவரம் அடுத்த திருநீர்மலை உய்யாலம்மன் கோவில் தெருவில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தெருவில். கிருஷ்ணவேணி என்பவர் மற்றும் அவரது 3 மகன்களான உத்திர மூர்த்தி, கார்த்தி மற்றும் பாண்டியன் ஆகியோரின் வீடுகள் உள்ளது. இந்த வீட்டின் அருகில் மின்கம்பம் பழுத டைந்த நிலையில் இருந்தது. இதனை மாற்றி தர வேண்டும் என பல மாதங்களாக அப்பகுதி மக்கள் மின்வாரியத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது
இந்நிலையில் நேற்று மதியம் பழுதடைந்த மின்கம்பம் திடீ ரென சரிந்து விழுந்து 3 வீடுகளில் தீப்பிடித்தது. தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்தவுடன் தாம்பரம் தீயணைப்பு துறையி னர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச் சியடித்து தீயை அணைத்தனர்.
அதற்குள் வீடுகள் முழுமையாக எரிந்து சாம்பல் ஆனது. தீ விபத்தில் வீடுகளில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான டி.வி., பிரிட்ஜ், கட்டில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாச மாயின. இந்த விபத்து நடந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் பெரிய உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது இந்த சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட வர்களை தாம்பரம் மாநகராட்சிதுணை மேயர் கோ.காமராஜ் நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார்.