தாம்பரம் மாநகராட்சி 26வது வார்டு காந்தி நகர் பகுதியில் அப்துல் கலாம் நற்பணி மன்றத்தின் செயலாளர் குனசேகரன் தலைமையில் ஏழை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் ,சீருடை ,பேக் மற்றும் எழுது பொருட்கள் சுமார் 85 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் +2 அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக செங்கல் பட்டு வடக்கு மாவட்ட தி மு க துணை செயலாளரும் குரோம்பேட்டை ராதா நகர் வணிகர்கள் நலச்சங்க துணை தலைவருமான குரோம்பேட்டை நாசர் நவமணி பவுண்டேஷனை சேர்ந்த உமாராணி. ராதா நகர் காஞ்சனா தேவி காந்தி நகர் பகுதியை சேர்ந்த பிரபாகரன். ஹரிகிருஷ்ணன். கமலகண்ணன். ராம மூர்த்தி . பழனிவேல் . சரவணன். பழனி விக்னேஷ் . பாஸ்கரன் நாகல்கேனிஅரசினர் மேல்நிலைப்பள்ளி பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் துரை பாலாஜி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்