சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லிங்கம் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (42) ஒரகடத்தில் கண்ணாடி உற்பத்தி செய்யும் தொழில் நடத்தி வருகிறார்,

இவருடைய மனைவி மகேஸ்வரி கடந்த 22ம் தேதி காலை தனது மகள் சிறப்பு குழந்தை என்பதால் கையெழுத்து பயிற்ச்சி பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு இரண்டு மணி நேரத்தில் வீடு திரும்பிய போது முன் கதவு உடைக்கபட்டிருந்தை கண்ட அதிர்ச்சியடைந்தார்,

உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கபட்டிருந்த 40 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை அடிக்கபட்டது தெரியவந்ததது,

சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஹெல்மெட் மற்றும் கையுறை அணிந்து வந்த மர்ம நபரை வாகன எண்ணை வைத்து தேடி வந்த நிலையில் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (42) என்பவரை கைது செய்து விசாரனை செய்ததில் நகைகளை கொள்ளையடித்து தனியார் பைனான்ஸ் நிறுவனம் மற்றும் திருசெந்தூரில் உள்ள அடகு கடைகளில் விற்பனை செய்ததை ஒப்புகொண்டதை அடுத்து 40 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தர்,

ஏற்கனவே பிரபாகரன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் இருப்பது குறிப்பிடதக்கது.