
விஜய் தாக்கு
வியாசர்பாடியில் த.வெ.கவினர் தாக்கப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து காவல் துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி, அப்பாவிகள் மீது மிருகப் பலத்தைக் காட்டி, மக்களிடம் வெறுப்புகளைக் குவித்து வருகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான விளம்பர மாடல் அரசு, பெண்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை வீதியில் போராட வைத்திருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால், தவெக சார்பில் மக்களைத் திரட்டி மிகப்பெரிய மக்கள் போராட்டம் நடத்தப்படும்,” என்று அக்கட்சியின் தலைவர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.