புறநகர் பகுதியில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் திடீர் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் நனைந்தபடி சென்றனர்சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக அதிக வெப்பத்துடன் அனல் காற்று வீசி வந்த நிலையில் இன்று திடீரென சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் பல்லாவரம் குரோம்பேட்டை சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் தூரலுடன் தொடங்கிய மழை திடீரென நல்ல கனமழை கொட்டி தீர்த்தது இதில் திடீர் மழையை பொருட்படுத்தாமல் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அதில் நனைந்தபடி மகிழ்ச்சியுடன் சென்றனகடந்த சில தினங்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இந்த திடீர் மழை கொட்டியதை புறநகர் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்மேலும் அதில் நனைந்து மகிழ்ச்சியோடு வாகனத்தை ஓட்டி சென்றனர்