தூத்துக்குடியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிபவர்கள் தங்களுக்கு என்எல்சி-யில் வழங்குவது போல் ஊதியம் வழங்க கோரி 11 வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இதுவரை 8000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது.