நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விவாதம் நடத்த கோரி ஆர்ப்பாட்டம் மத்திய விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
விவசாயிகளின் கோரிக்கை குறித்து பேச தயார் – மத்திய அரசு அறிவிப்பு
பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி 5ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என மத்திய அரசு அறிவிப்பு மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா, விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு நேரம் கடத்தவே பேச்சுவார்த்தை நடத்துவதாக விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டு
அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயண திட்டத்திற்கு எதிர்ப்பு: பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் ஓடாது
அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் அரசின் சக்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் மற்றும் வாகனங்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஸ்களில் இலவச பயணம் :கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு பஸ்களில் பெண்கள் மாநிலம் முழுவதும் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு வருவாய் இழப்பு […]
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரை சந்தித்து “இந்தியா” கூட்டணி கட்சிகள் முறையீடு.
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் INDIA கூட்டணி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரிடம் முறையிடும் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் சென்றுவந்த 21 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குடியரசு தலைவருடன் சந்திப்பு தமிழக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, திருமாவளவன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
கால்நடைகளால் விபத்து தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தாம்பரம் மாநகராட்சியில் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதை தடுக்க கோரிமக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக ஊர்வலமாக சென்று மாநகராட்சி முன் கோஷம் எழுப்பி அடையாள ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘அனகாபுத்தூரில் தம்பதியர் இருவர் வாகனத்தில் செல்லும்போது நடுரோட்டில் படுத்திருந்த மாட்டின் மீது மோதி கட்டுப்பாடு இழந்து நாகம்மாள் கீழே விழுந்தவுடன் எதிரே வந்த தண்ணீர் லாரி மோதி உடல் நசுங்கி பலியாகி உள்ளார் எனவே மாநகராட்சி சாலையில் தெரியும் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் […]
மணிப்பூர் சம்பவம் : தாம்பரம் மேயர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் பாலியல் வன்கொடுமையை தடுக்கா ஒன்றிய பாஜக அரசை கண்டித்து செம்பாகத்தில் தாம்பரம் மேயர் தலைமையில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை தடுக்காத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தாம்பரம் சட்டமன்ற தொகுதி திமுக மகளிர் அணி சார்பில் செம்பாக்கம், காமராஜபுரம் பேருந்து நிலையம் அருகில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நெல்லிக்குப்பம் […]
டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பா.ம.க.வினர் சாலை மறியல்-ஆர்ப்பாட்டம்
நெய்வேலியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம்எடப்பாடி: டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடலூர் மாவட்டம், நெய்வேலி பகுதியில் என்.எல்.சி. நிறுவன விரிவாக்க பணிக்காக, நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கோரி, இப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று என்.எல்.சி. நுழைவுவாயில் முன்பு மறியல் […]
மணிப்பூர் கொடூரம் திமுக மகளிர் அணி கொட்டும் மழையில் பரிமளா சிட்டிபாபு தலைமையில் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுர தாக்குதலை தடுக்காத ஒன்றிய, மணிப்பூர் மாநில அரசுகளை கண்டித்து தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பரிமளா சிட்டிபாபு தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ரமணி ஆதிமூலம், கிரிஜா சந்திரன், சசிகலா கார்திக் உள்ளிட்ட திமுக மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டு பாஜக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது […]
பாலவாக்கத்தில் மோடி உருவ பொம்மை எரிக்க முயற்சி
மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்தவ பெண்கள் மீது நடைபெறும் பாலியல் தாக்குதலை கண்டித்தும் குற்றவாளிகள் மீது கடும்மையாக நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தில் பாலவாக்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முகமது யூசுப் தலைமை கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைமை நிலைய செயலாளர் ஜைனுல் ஆபிதின், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சோமு, விடுதலைச்சிறுத்தை கட்சி காஞ்சி-விழுப்புரம் மண்டல செயலாளர் சூ.க.செழியன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், இயக்க நிர்வாகிகள் 500 க்கும் […]
திமுக அரசை கண்டித்து தாம்பரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
காய்கறி விலை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதை கண்டித்தும் இவற்றை கட்டுபடுத்த தவறிய திமுக அரசையும் கண்டும் காணாமல் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் செங்கல்பட்டு மேற்கு, கிழக்கு மாவட்டக் கழக அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தாம்பரம் சண்முகா சாலையில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் தலைமை வகித்தார்.செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் […]