
சென்னை தாம்பரம் அடுத்த அகரம் தென் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளதை அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்க சந்தானம் என்ற நபர் பொதுநல வழக்கு தொடுத்து அதன் மூலம் உயர்நிதிமன்ற உத்தரவுவின்படி சம்மந்தப்பட்ட வீடுகளை இடிக்க உத்தரவிட்டது ஆனால் வருவாய் துறை இடிக்க சென்ற போது ஆளும் கட்சி சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் தடுத்து நிறுத்தியதால் காலதாமதம் ஏற்பட்டது மீண்டும் சம்மந்தப்பட்ட நபர் மேல் நடவடிக்கை வழக்கு நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது அதன்படி ஏற்கனவே இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறை மற்றும் மாவட்ட ஆட்சியருக்கும் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டு உடனடியாக சம்பந்தப்பட்ட வீடுகளை இடித்து ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டுமென கண்டனம் தெரிவித்தது அதன் பேரில் சேலையூர் காவல்துறை உதவி ஆணையர் தலைமையில் தற்போது 25 சென்ட் நிலப்பரப்பில் உள்ள வீடுகளை இடிக்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள் இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்