
தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களை சந்திப்பதற்காக புதுதில்லி வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை புதுதில்லி விமான நிலையத்தில், கழக மக்களவை குழுத் தலைவர் திரு. டி.ஆர்.பாலு, மக்களவை மற்றும் மாநிலங்களவை குழுத் தலைவர் திருமதி கனிமொழி, உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ஏ.கே.எஸ். விஜயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் மலர்கொத்து வழங்கி, சால்வை அணிவித்து வரவேற்றனர்.