
சிட்லபாக்கம் 43-வது வார்டு இருக்கும் பாலு அவன்யூ பகுதியில் ஆனந்தம் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு மூன்றாவது மாடியில் அக்பர் ஷா என்பவர் வாடகைக்கு குடியிருக்கிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு ஹைதராபாத் சென்று விட்டார். கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி காலையில் கட்டில் மெத்தைக்கு அருகில் உள்ள ஸ்விட்ச் பாக்சில் மின்கசிவு ஏற்பட்டு மத்தியில் தீப்பிடிக்க தொடங்கியது .
வீட்டின் ஜன்னல் கதவு பூட்டப்பட்ட நிலையில் புகை வெளியே வந்தது. இதை பார்த்தவர்கள் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ஜெகனிடம் தெரிவித்தனர்.அவர் உடனடியாக தீயணைப்பு துறை, மின்துறை மற்றும் காவல் துறைக்கு உடனடியாக தகவல் அளித்தார் .20 நிமிடத்திற்குள் அனைவரும் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் தீயணைப்பு வீரர் குணசேகரன் தலைமையிலான குழு தீயை அணைத்தது .தீ விபத்து குறித்து உடனடியாக தகவல் தந்த மாமன்ற உறுப்பினர் ஜெகனுக்கும் மற்ற பணியாளர்களுக்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.