
மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர் திரு.எல்.முருகன், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர்அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.