கலைவாணர்‌ அரங்கத்தில்‌ நடைபெற்ற முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ நூற்றாண்டு நினைவு நாணயம்‌ வெளியீட்டு விழாவில்

மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத்‌ துறை அமைச்சர்‌ திரு.ராஜ்நாத்‌ சிங்‌ அவர்கள்‌ முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ பெற்றுக்கொண்டார்‌. இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நீர்வளத்‌ துறை அமைச்சர்‌ திரு.துரைமுருகன்‌ உள்ளிட்ட அமைச்சர்‌ பெருமக்கள்‌, மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர்‌ திரு. எல்‌.முருகன்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌, தலைமைச்‌ செயலாளர்‌ திரு.சிவ்‌ தாஸ்‌ மீனா, இ.ஆ.ப. பொதுத்‌ துறை செயலாளர்‌ திருமதி.ரீட்டா ஹரீஷ்‌ தக்கர்‌, இ.ஆ.ப. […]

முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ நூற்றாண்டு நினைவு நாணயம்‌ வெளியீட்டு விழாவிற்கு வருகைதந்த மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத்‌ துறை அமைச்சர்‌ திரு.ராஜ்நாத்‌ சிங்‌ அவர்களை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ பூங்கொத்து வழங்கி வரவேற்றார்‌. இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நீர்வளத்‌ துறை அமைச்சர்‌ திரு.துரைமுருகன்‌ உள்ளிட்ட அமைச்சர்‌ பெருமக்கள்‌, மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர்‌ திரு.எல்‌.முருகன்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌, தலைமைச்‌ செயலாளர்‌ திரு.சிவ்‌ தாஸ்‌ மீனா, இ.ஆ.ப., பொதுத்‌ துறை செயலாளர்‌ திருமதி. ரீட்டா ஹரீஷ்‌ தக்கர்‌, இ.ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ நூற்றாண்டு நினைவு நாணயம்‌ வெளியீட்டு விழாவிற்கு வருகைதந்த

மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத்‌ துறை அமைச்சர்‌ திரு.ராஜ்நாத்‌ சிங்‌ அவர்களும்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்களும்‌ சென்னை, மெரினா கடற்கரையில்‌ அமைந்துள்ள பேரறிஞர்‌ அண்ணா அவர்களின்‌ நினைவிடத்தில்‌ மலர்வளையம்‌ வைத்து மரியாதை செலுத்தினார்கள்‌. இந்நிகழ்வின்போது, மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர்‌ திரு.எல்‌.முருகன்‌, மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்கள்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌ மற்றும்‌ அரசு உயர்‌அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

கலைஞர் நூற்றாண்டு நினைவு ₹100 நாணயம் வெளியீட்டு விழா வரும் 18ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்க உள்ளது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இவ்விழாவில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார். எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர் 6-வது ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

இந்நிகழ்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ 101-ஆவது பிறந்த நாளையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்

சென்னை, மெரினா கடற்கரையில்‌ அமைந்துள்ள முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ நினைவிடத்தில்‌ மலர்தூவி மரியாதை செலுத்தினார்‌. இந்நிகழ்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர்‌ துரைமுருகன்‌ உள்ளிட்ட அமைச்சர்‌ பெருமக்கள்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌, வாரியத்‌ தலைவர்கள்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ 101-ஆவது பிறந்த நாளையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌‌

சிஐடி காலனியில்‌ முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ திருவுருவப்‌ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்‌. இந்நிகழ்வின்போது, அமைச்சர்‌ பெருமக்கள்‌, நாடாளுமன்ற உறுப்பினர்‌ கனிமொழி, ராஜாத்தி அம்மாள்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ உடனிருந்தனர்‌.

முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ 101-ஆவது பிறந்த நாளையொட்டி

முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ 101-ஆவது பிறந்த நாளையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் சென்னை, ஓமந்தூரார்‌ அரசினர்‌ தோட்ட வளாகத்தில்‌ அமைந்துள்ள முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ திருவுருச்சிலைக்கு அருகில்‌ வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்‌ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்‌. இந்நிகழ்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர்‌ துரைமுருகன்‌ உள்ளிட்ட அமைச்சர்‌ பெருமக்கள்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌, வாரியத்‌ தலைவர்கள்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌

கலைஞருடனான நினைவுகளை பகிர்ந்த பிரதமர் மோடி

தனது நீண்ட காலப் பொது வாழ்க்கையில் தமிழ் மக்களுக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் கலைஞர் கருணாநிதி பாடுபட்டார். தனது அறிவார்ந்த இயல்புக்காகவும் அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார்- முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவருடனான நினைவுகளை பகிர்ந்து பிரதமர் மோடி X தளத்தில் பதிவு.