தாம்பரம் முடிச்சூர் சாலை மேம்பாலம் அருகே சாலையில் குப்பைகளை அகற்றி கொண்டிருந்த துப்புரவு தொழிலாளிகள் மீது தக்காளி ஏற்றி வந்த சரக்கு வாகனம் மோதி விபத்து

சம்பவ இடத்திலேயே துப்புரவு தொழிலாளி தர்மன் என்ற தர்மு வயது 35 உயிர் இழப்பு

மேலும் இரண்டு தொழிலாளர்கள் படுகாயம்

தொழிலாளிகள் குடும்பத்தினர் கதறல்

சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட தாம்பரம் முடிச்சூர் மேம்பாலம் இறக்கத்தில் தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் இன்று காலை துப்புரவு பணி மேற்கொண்டிருக்கும் பொழுது தாம்பரத்தில் இருந்து முடிச்சூரை நோக்கி அதி வேகத்தில் வந்த பொலிரோ தக்காளி வாகனம் குப்பை அகற்றிக் கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தர்மன் என்கிற தர்மு வயது 35 என்ற நபர் மீது அதிவேகத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் துப்புரவு பணியாளர் தர்மு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் இருவர் இதில் படுகாயம் அடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவசர ஊர்தி வாகனத்தின் மூலம் காயம் அடைந்தவர்களை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சை அனுப்பி வைக்கப்பட்டனர். பலியான தர்முவின் உடல் கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய் போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உயிரிழந்த தர்முவின் உறவினர்கள் உடன் வேலை செய்யும் வேலை ஆட்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.