
தாம்பரத்தில் விலையுர்ந்த இருசக்கர வாகனத்தில் சைலன்சரில் அதிக ஒலி எழுப்பியபடி வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக செயல்பட்ட வாலிபருக்கு 12,000 அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை மேற்கு தாம்பரம் சண்முகம் ரோடில் இருந்து தர்காஷ் சாலை ,சி.டி.ஒ காலனி வரை வாலிபர் ஒருவர் விலையுயர்ந்த (Harley Davidson) பைக்கில் சைலன்சரில் அதிக ஒலி எழுப்பிய படி அதிவேகமாக விபத்து ஏற்படும் வகையில் ஓட்டி சென்றதால் மற்ற வாகன ஒட்டிகள் பதற்றமடைந்தனர்.
வாலிபரை பிந்தொடர்ந்த சென்ற வாகன ஓட்டி ஒருவர் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வளைதளங்களில் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் கவனத்திற்க்கு சென்ற நிலையில் வாலிபர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவுவிட்டதின் பேரில்
வாகன என்னை கொண்டு வாலிபர் மீது தலை கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், இன்சுரன்ஸ் இல்லாமல் வாகனத்தை இயக்குதல், உள்ளிட்டவைகளின் கீழ் தாம்பரம் போக்குவரத்து ஆய்வாளர் செல்லப்பாண்டியன் 12,000 ரூபாய் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.