
சென்னை விமான நிலையத்தில் உலக உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
சென்னை விமான நிலையத்தில் உலக உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு ஏர்போர்ட் ஆதாரிட்டி ஆப் இந்தியாவுடன் இணைந்து காவேரி தனியார் மருத்துவமனை, எஸ் ஆர் எம் தனியார் மருத்துவக் கல்லூரி இணைந்து உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது,
இந்த நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சென்னை விமான நிலையத்தின் டெர்மினல் 1 முதல் டெர்மினல் 4 வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பேரணியாக நடந்து உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.
மேலும் இந்தியாவில் 140 கோடி மக்கள் இருந்தாலும் 0.01 சதவீத மக்கள்தான் உடல் உறுப்பு தானங்கள் குறித்து விழுப்புணர்வு அறிந்து உடல் உறுப்புகளை தானம் செய்து வருகின்றனர். இதுபோன்ற தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் உடலுறுப்பு தானம் அளிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்தனர்.