காவல் துறையில் பணிகளை தாண்டி தங்கள் விருப்பம் உள்ள நற்செயலில் ஈடுபட வேண்டும். அதுபோல் செயல் மனதளவில் ஏற்ற இறக்கங்களை கடந்து செல்ல உதவும், 7 பெண்கள் உள்ளிட்ட 22 பேர் நேரடி டி.எஸ்.பி பயிற்சியை வண்டலூர் ஊனைமாஞ்சேரி உயர்காவல் பயிற்சியகத்தில் துவக்கிவைத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பேசினார்:-

வண்டலூர் அடுத்த ஊனைமாஞ்சேரியில் உள்ள உயர் காவல் பயிற்சியத்தில் 13வது பயிற்சி குழுவில் 7 பெண்கள்,15 ஆண்கள் உள்ளிட்ட 22 நேரடி டி.எஸ்.பி பயிற்சி வகுப்பை தமிழக காவல் துறை தலைவர் சங்கர் ஜீவால் துவக்கிவைத்து காவல்துறையினர் முன்பாக பேசினார்.

30 ஆண்டுகளாக காவல் துறையில் பணி செய்யும் அனுபவத்தில் தெரிவிக்கிறேன் காவல் துறையில் பயிற்சி காலத்தை தாண்டி நாள்தோரும் பயிற்சி மிக முக்கியம் உடல் நலன் பல்வேறு ஆற்றல்களை தரும்.

அதுபோல் பலதிறன்களை மேம்படுத்திகொள்ள வேண்டும். அதனுடன் நல்ல செயல் திறனை வெளிப்படுத்தி பணியாற்றவேண்டும். அதனுடன் சரலமாக புரியும்படி பேசவும், விளக்கமாக நல்ல கையெழுத்துகளுடன் எழுத வேண்டும் இது எல்லாம் சேர்ந்து தான் அதிகாரிகள் சரியான நபரா என நிர்ணையம் செய்வார்கள்.

அதுபோல் காவல்துறை உள்ளிட்ட எந்த துறையில் பணி செய்தாலும் அந்த துறையை தாண்டி தங்களுக்கு என பிடித்த செயல்களை செய்து வரவேண்டும் அப்போது தான் பணியில் நாளுக்கு நாள் அழுத்தங்கள் இருந்தாலும் பிடித்த செயல் அமைதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் என்றார்.

முன்னதாக உயர் காவல் பயிற்சியத்தின் சார்பில் துப்பாக்கிகளை ஏந்திய காவல்துறையினர் டி.ஜி.பி சங்கர் ஜிவாலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

காவல் துறை பயிற்சியக டி.ஜி.பி சந்திப் ராய் ரத்தோர், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்த நேரடி டி.எஸ்.பி பயிற்சியில் தேர்வான 22 பேரில் ஒரு பி.எச்.டி டாக்டர் பட்டம் பெற்றவர். ஒரு கால்நடை மருத்துவர், 14 பொறியியல் பட்டதாரிகள் ஆவார்கள், அதில் 10 பேர் அரசு துறையில் பணியாற்றியவர்கள், ஒருவர் தனியார் துறையிலும், 11 நபர்கள் முதல் முறையாக பணியை துவங்கியுள்ள இவர்களுக்கு ஓராண்டு பயிற்சியாக அறிவு திறன் மேம்பாடு, சமுக காவல், உடற்பயிற்சி, ஆயுத பயிற்சி, சட்டம், உளவுத்துறை, உள்நாட்டு பாதுகாப்பு, தகவல் தொடர்பு, சைபர் கிரைம், நீச்சல், மலையேற்றம், உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும் என உயர் காவல் பயிற்சியகம் சார்பில் தெரிவித்தனர்.