தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் திருமணமான 8 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை, சாவில் சந்தேகம் 12 சவரன் நகையை வாங்கிய மாமியர் மகளுக்கு போட்ட நிலையில் நகை தராமல் சித்திரவதை செய்ததாக உறவினர்கள் ஜி.எஸ்.டி சாலையில் மறியல்

தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார், மஞ்சுளா.

இவர்கள் இருவரும் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 8 மாதம் முன்பாக திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடந்துள்ளது.

திருமணம் நடைபெற்ற அந்த நாளில் இருந்து மஞ்சுளாக்கும் மாமியார் சித்ராவுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.

இந்த நிலையில் மஞ்சுளா தன் கணவருடன் மணிமங்கலம் பகுதியில் தனியாக தனிக்குடுத்தனம் சென்றுள்ளார்.

அப்பொழுது மஞ்சுளாவின் மாமியார் சித்ரா மஞ்சுளாக்கு வரதட்சணையாக போட்ட 12 சவரன் தங்க நகைகளை வாங்கி அதை தன் மகளுக்கு கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் பலமுறை நகைகளை கேட்டும் மாமியார் தராததால் மஞ்சுளா மாமியார் மீது மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து அந்த புகாரை மணிமங்கலம் போலீசார் விசாரணை செய்த பிறகு மஞ்சுளாவின் மாமியார் சித்ரா காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தருவதாக எழுதிக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் நகை வரும் என்று எண்ணி பார்த்த நிலையில் திடீரென மஞ்சுளா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் புது பெண் தற்கொலை செய்யவில்லை மஞ்சுளா உடலில் பல காயங்கள் இருப்பதாகவும் சாவில் சந்தேகம் உள்ளது என உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.

மேலும் மணிமங்கலம் போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்றும் முறையாக ஆர்டிஓ விசாரணை வைக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மஞ்சுளா உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் நியாய வேண்டும் என திடீரென குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் பெண்கள் கைக்குழந்தையுடன் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சென்று குரோம்பேட்டை காவல் ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில் தற்போது சாலை மறியல் கைவிடப்பட்டுள்ளது.