பள்ளிக்கரணையில் கட்டுபாட்டை இழந்த கார் ஏரியில் பாய்ந்து முழுகியது. காரில் இருந்த தனியார் ஐ.டி நிறுவன பாதுகாவலர் உயிரிழப்பு. ஓட்டுனர் தப்பி கரை சேர்ந்தார்

சென்னை அடுத்த சிறுச்சேரியில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் கார் ஓட்டுனராக பணி செய்பவர் ராஜசேகர்(33), அதே ஐ.டி நிறுவனத்தில் இரவு பாதுகாவலராக பணி செய்பவர் பீஹார் மாநிலத்தை சேர்ந்த கெளஷல்குமார்(27), வழக்கம் போல் இரவு பணி முடித்த ஐ.டி ஊழியர்களை பாதுகாவலர் கெளஷல்குமார் பாதுகாப்புடன் ஓட்டுனர் ராஜசேகர் பல்லாவரம், பம்மல் பகுதியில் இறக்கி விட்டு மீண்டும் பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலைவழியாக திரும்பும் போது ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் கண் அசந்துள்ளார், அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் பாய்ந்துள்ளது. இதில் கெளஷல்குமார் உயிரிந்தார், ஓட்டுனர் ராஜசேகர் தப்பி கரை சேர்ந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். மேலும் தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் காரை மீட்டனர். இது குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் கெளஷல்குமார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

இதனால் அதிகாலையில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.