
தாம்பரம் அருகே நடந்து சாலையில் சென்ற மூதாட்டியிடம் 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
செயின் பறிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், காயத்ரி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் 71 வயதான மூதாட்டி விஜயலட்சுமி.
மதியம் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பிய போது, சுதர்சன் நகர் முதல் குறுக்கு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியின் எதிர்திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியை கடந்து சென்று இருருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மூதாட்டியின் பின்னால் சென்று கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்று விட்டார்.
தகவலறிந்து சென்ற சேலையூர் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி செயின் பறிப்பு கொள்ளையனை தேடி வருகின்றனர்.