பெருந்துயரில் ஆழ்ந்திருக்கும் அவரது மனைவிக்கு, ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.

அறிவார்ந்த தலைவராக விளங்கியவர். கல்விதான் சமூகத்தை முன்னேற்றும் என்பதை உணர்ந்து, பல இளைஞர்களின் உயர்கல்விக்கு ஊன்றுகோலாக இருந்தவர். சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் குரல் கொடுத்தவர். அதற்காகக் கடுமையாக உழைத்தவர். திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவு, சமூக ஒற்றுமையை விரும்பும் மக்கள் அனைவருக்கும் பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்.

இந்தக் கொடூரமான செயலில் தொடர்புடைய அனைவர் மீதும், கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்.