நான் ஒரு மருந்து சொன்னேன்; அந்த மருந்தை வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியம் என்னை கிண்டல் செய்கிறார்; ஒன்றும் தெரியாமல் இருக்க நான் ஒன்றும் ஸ்டாலின் அல்ல.

இப்படிப்பட்ட அமைச்சர்கள் இருக்கும் வரை இந்த நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

கள்ளக்குறிச்சியில் நடந்த துயரமான சம்பவம் மிகுந்த வேதனை, அதிர்ச்சியளிக்கிறது திமுக பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் போதைப்பொருள் விற்பனை, கள்ளச்சாராய மரணம் அதிகரிப்பு.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

காற்றை எப்படி தடை செய்யமுடியாதோ் அப்படி மக்கள் உணர்வுகளுக்கு தடை விதிக்க முடியாது.

அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு செய்து முதல்வர் அடக்குமுறையை கையாளுகிறார்.