
வேளச்சேரியில் இருசக்கர வானம் மீது தனியார் நிறுவன பேரூந்து மோதியதில் இளைஞர் பலி
சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிவாசன்(19) வேளச்சேரி மேம்பாலம் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மோதிய நிலையில் இருசக்கர வாகனம் பேரூந்து கீழே சிக்கியது. இதில் ஜோதிவாசன் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். போக்குவரத்து புலனாய்வு போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.